சன்னதியில் நடக்கும் உத்ஸவங்க்ளின் கால விளக்கம்

வைகாசி - மாதம்

திருவோணம் – வஸந்த உத்ஸவம் சாத்துமுறை சேஷவாகனம் (முந்திய அனுஷம் தொடங்கி 6-நாள் உத்சவம் - திருநைந்தவனம் வஸந்த மண்டபத்தில்)

ஆடி - மாதம்

ஜோஷ்டாபிஷேகம் (4 நாள்) மூல்வர், உத்ஸவர் கவசம் களைந்து திருமன்சனம், 4-ம் திருநாள் மாலை தொட்டித் திருமஞ்சனம்.

ஆவணி - மாதம்

திருவோணம் - பவித்ர அதஸ்வ சாத்துறை ஷீர்யோதய கருடசேவை - (முந்திய கேட்டை தொடங்கி 5-நாள் உத்ஸவம்)

உத்ஸவம்
புரட்டசி - மாதம்

திருவோணம் - ப்ரஹ்மோத்ஸவம் சாத்துமுறை கோரதம் (முந்திய சித்திரை நட்சத்திரம் தொடங்கி 9-நால் உத்ஸவம்ஸ்ரீ தேசிகள் அவதார உத்ஸவம்)

ஐப்பசி - மாதம்

திருவோணம் - திருக்கல்யாண உத்ஸவம் தொடக்கம் (பின் 12-நாள் உத்ஸவம்)

மார்கழி - மாதம்

பகல் பத்து 10-நாள், இராப்பத்து 10-நாள் இயற்பாசாத்துமுறை, 1-நாள் ஸ்ரீ தேசிகப் பிர
பந்தம் சாத்துமுறை 1-நால் (மொத்தம் 22 - நாள்)

தை - மாதம்

திருவோணம் தெப்ப உத்ஸவம் சாத்துமுறை - (முந்திய கேட்டை தொடங்கி 5-நாள் உத்ஸவம்)

பங்குனி - மாதம்

திருவோணம் - ப்ரஹ்மோத்ஸவம் சாத்துமுறை (அவதர மஹோத்ஸவம்) திருத்தேர். (முந்திய சித்திரை தொடங்கி 9-நால் உத்ஸவம்)

மற்ற மாதத்திருவோணங்களிலும், மிகம்பல பக்தகோடிகள் வந்து புஷ்கரிணியில் நீரடிப் பெருமாளைத் தரிசித்து
அவதார நஷைத்ர உத்ஸவைத்தை ஸேவித்துச் செல்கின்றனர். ஒவ்வொரு திருவோணத் தினத்தன்று, பகல் 11.00 மணிக்கு, எம்பெருமானுக்கு தீப வழிபாடு சிறப்புடன் நடக்கும். தீபம் எடுப்பவர்கள் உப்பிலியப்பன் அருள்வாக்கு சொல்வது வழக்கம். ஒவ்வொரு மாதத்துத் திருவோணமும் இத்தலத்து எம்பெருமானுக்கு மிக விசேஷ தினமாகும்

1. பிரார்தனைத் தங்கரத உலா

தமிழ்நாட்டிலேயே முதன் முதலாக வைனவத் தலமொன்றில் தங்கரதம் அமைக்கப்ப்ட்டுள்ளது. இத்தலதில் மட்டுமே, பக்தர்கள் பிராரித்தனைகாகப் பெருமாளையும் பூமிதேவியையும் தங்கரததில் எழுந்தருள்ச் செய்து வெளிப்பிராகாரத்தில் உலா வருவது கண்கொள்ளாக்காட்சியாகும்.பிரார்தனைத் தூலாபாரம்

தமிழக வைணவத் தலங்களில் முதலாவதாகத் துலாபாரம் நிறுவப்பட்டது. இத்தலத்திதான் அன்பர்கள் தமது எடைக்குச் சமமாய்த் தம்மால் இயன்றதைத் தந்திடும் வகையில் உப்பு தவிர அனைத்துப்பொருட்களும் காணிக்கையாக்ப் பெறப்படுகின்றன. திருக்கோயிலிலேயே நட்பு சந்தை விலைக்குப் பொருட்களைப் பெற்றுப் கொள்ளலாம்.

நித்யராதனைக் கட்டளை முதலீடு

பரம்பரையாக ஆண்டிற்கு ஒரு நாள் விரும்பும் நாளில் (பிறந்த நாள், திருமண நாள் மற்ரும் இதர விஷேச நாட்கள்) பெருமாளுக்கு ஆறுகால பூஜைகல் செயிய முதலீடாக ரூ.1000/- செலுத்தி பெருமாளிடம் அருளைப் பெறலாம்.


அன்னதான திட்டம்

இத்திருகோயிலில் தினந்தோறும் 100 பக்தர்களுகு அன்னதானம் அளிக்கபட்டு வருகிறது. ஒரு நாளைக்கு அன்னதானம் செய்ய ரூ.1500/- நிரந்தர முதலீட்டுக் கட்டணம் ஆகும்.

.
  

பசு பராமரிபுத் திட்டம்

இத்திருக்கோயிலில் காணிக்கையாக வரப்பெறும் பசுக்களுக்கு நல்ல முரையில் தெவனம் அளித்து அவைகளை நல்ல்முரையில் வளர்த்து பராமரித்து மகாலெட்சுமி வழிபாட்டிற்கு சமம். அத்தகைய பசுக்களுக்கு ஒரு நாள் உணவளிக்க ரூ. 500 /- ஆகும். ஆண்டிற்கு ஒரு நாள் பரம்பரையாக பசுக்கலுகு உணவளிக்க ரூ. 5000/- நிரந்தர முதலீடு செய்து மகாலெட்சுமியின் அருள்பெறலாம்

"பூமா" யானை பராமரிப்புத் திட்டம்

யானைகு உணவளித்து பராமரிப்பது முதன் முதற் கடவுள் கஜமுகன் வளிப்பாட்டிற்கு சமம். அத்தகைய சிறப்பு மிகுந்த யானைக்கு ஒரு நாள் உணவளிக்க ரூ. 500 /- ஆகும். ஆண்டிற்கு ஒரு நாள்
தாங்கள் குறிப்பிடும் நாளில் உணவளிக்க ரூ.5000 /- நிரந்தர முதலீடு செய்து, கஜமுகனின் பேரருள் பெரலாம்.

.

கருணை இல்லம்

இத்திருக்கோயிலில் வாயில்லக கருணை இல்லம் நடைபெற்று வருகிறது. இதில் ஏழை, எளிய 25 மாணவிகல் முன்று வேளையும் உணவருந்தி வருகின்றனர். இவர்களுக்கு தேவைப்ப்டும் பாட புத்தகங்கள், நோட்டுகள் அளித்து உதவலாம்.

சொர்ண புஷ்ப அர்ச்சனை

தமிழக திருப்பதி என போற்றப்படும் இத்திருக்கோயிலில் திருப்பதியை போன்ற சொர்ணபுஷ்பம் அர்ச்சனைத் தொடங்கப்பட்டு உள்ள்து.ஸ்ரீபூமிதேவி தாயருக்கு சொர்ண புஷ்ப பூவினாலும் அர்ச்சனைகள் செய்யப்பட்டு வருகிறது. இத்ற்கு கட்டணம் ரூ. 300 /- ஆகும்.

சுதர்சன ஹோமம்

இத்திருக்கோயிலில் சுதர்சன ஹோமம் நடைபெறுகிறது. இந்த ஹோமத்தில் கலந்து கொள்வதல், ஏவல், பகைமை, வாழ்வில் செழிமை, நன்மக்கள்பேறு, நோயின்மை ஆகியவை பெற்று வளமுடன் வாழ சுதசன ஹோமத்தில் பங்கு பெறலாம். இத்ற்கு கட்டணம் ரூ. 5000 /- ஆகும்.

ஆயுஷ் ஹோமம்

இத்திருக்கோயிலில் மூலவர் சன்னதியில் மார்கண்டேயர் வீற்றியிருத்து அருள்பாலிப்பதால் ஆயுஷ்ஹோமம், சஷ்டி பூர்த்தி, சதாபிஷேகம் போன்றவைகள் இங்கு செய்வது பொருத்தமானதாகும்

பசு நெய்தீப கட்டளை

இத்திருக்கோயிலில் பசு தெய்தீப கட்டளை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டளையில் பங்கு பெருவோர்கள் மூலம் ஆண்டிற்கு ஒரு நாள் தாங்கள் குறிப்பிடும் நாளில் இத்திருக்கோயிலில் உள்ள மூலவர் சந்நிதி, அனுமர் சந்நிதி, ராமர் சந்நிதி, என்னபபன் சந்நிதி, மணியப்பன் சந்நிதி, கருடன் சந்நிதி, ஆகிய சந்நிதிகளில் பசு நெய்தீபம் எற்றப்படும். பசு நெய்தீபம் ஏற்றுவதால், பல்வேறு தோஷங்கள் நீங்கும். இதில் ரூ.100/- முதலீடு செய்து பங்கு பெறலாம். 
 
 

 

Copyrights © 2009 - 2010 Arulmigu Venkatachalapathiswami Temple Oppiliappan Koil All Rights Reserved
Site design and Maintained by Anna Silicon