ப்ரஹ்ம தீரித்தம்

அந்த இந்த்ர தீர்த்தத்தின் தென்புறத்தில் "ப்ரஹ்மதீர்த்தம்" என்ற ஒரு குளம் இருக்கின்றது. முன் ஒருகால் பிரமதேவன் அதில் நீராடி தவம் புரிந்து பிரமப் பதவி பெற்றான். அதனால் "ப்ரஹ்மதீர்த்தம்" என்று அது பெயர் பெற்றது. அதில் நீராடுபவன் தான் விரும்பும் எல்லாப் பலன்களையும் பெறுவான்.

தஷிணகங்கை

ஸ்ரீநீவாஸனுடைய ஆலயத்திற்குத் தெற்கில் தஷிண கங்கையெனும் நதி ஒடுகின்றது. ( இப்பொழுது நாட்டாறு என வழங்குகிறது. ) முன் ஒருகால் கங்கை நதியும் கோதாவரி நதியும் பிரமனிடம் சென்று வணங்கி "ஸ்வாமி! உலகிலுள்ள மக்கள் எங்களிடம் வந்து நீராடித் தங்கள் பாவங்கள் நீங்கப் பெற்றுச் செல்வதால் அந்தப் பாவங்கள் எங்களிடத்துத் தங்கி விடுவதாய்த் தோன்றுகிறது. அவற்றைப் போக்கவல்ல ஒர் இடத்தை எங்களுக்குக் காட்டியருள வேண்டும் என வேண்டினர். பிரமனும் "நதிகளே! கும்பகோணம் ஷேத்திரத்தில் ஸ்ரீ சாரங்கபாணி ஸ்வாமிக்கு மாலையாக இருபுறமும் பெருகுவதற்கு மேற்றிசையில் காவிரி இரண்டாகப் பிரிந்து ஒடுகிறது. நீங்கள் இருவரும் தென்புறத்தில் ஒடுகின்ற காவிரிப் பிரிவில் உட்புகுந்து கலந்து மார்க்கண்டேய ஷேத்ரத்திற்கு மேற்கில் இரண்டாகப் பிரிந்து பெருகுங்கள். பின் பூமிதோவி நாயகனான எம்பெருமானுக்குத் திருமஞ்சன தீர்த்தமாகப் பயன்படுவீர்களாயின் எல்லாப் பாவங்களினின்றும் விடுபடுவீர்கள்” என்று கூற அவர்களும் அங்ஙனம் செய்தனர்.


 
 
 

 

die besten online casino

Copyrights © 2009 - 2010 Arulmigu Venkatachalapathiswami Temple Oppiliappan Koil All Rights Reserved
Site design and Maintained by Anna Silicon