ஸுர்யதீர்த்தம்

மேற்கூறிய சார்ங்க தீர்த்த்திற்கு வடபுறத்தில் " ஸூர்யதீர்த்தம்" என்ற ஒரு புண்ணிய பொய்கை இருக்கின்றது. அதைப்பற்றிக் கேட்டாலும் அதை நினைத்தாலும், பார்த்தாலும் மாந்தர் நற்கதிபெறுவது திண்ணம். அத்தீர்த்தத்ததின் வரலாறு வருமாறு :- முன்னொறுகால் மஹேசுவரர் பிரமனுடைய தலையைக் கிள்ளியெறிந்து விட்டார். அப்பாவத்தைப் போக்க புண்ணியத் தலயாத்திரை செய்தார். பாவம் நீங்கவில்லை. பின் மார்க்கண்டேய ஷேத்திரமாகிய திருவிண்ணகருக்கு வந்தார். அஹோராத்ர புஷ்கரிணியில் நீராடி ஸ்ரீநிவாஸனைத் தரிசித்துப் பாவம் நீங்கப்பெற்றார், மிக்க ஒளியும் பெற்றார். இன்னும் மேற்கூறிய ஸுர்யதீர்த்ததின் கரையின் தவம் புரிந்து கொண்டிருக்கிறார். ஸுர்யன் நேரில் வந்து அக்குளத்தின் படித்துறை முதலியவற்றில் பழுதுபட்ட இடங்களைப் பண்படுத்தியபடியால் "ஸுர்யதீர்த்தம் எனப் பெயர் பெற்றது. முன் ஒரு கால் மஹேசுவரர் தஷனைக் கொன்றுவிட்டுக் கார்த்திகை மாத்த்திய ஞாயிற்றுக் கிழமையன்று அந்த ஸுர்யதீர்த்ததில் தம் சடையைக் கழுவித் தாமும் நீராடியபடியால் தோஷம் நீங்கப் பெற்றார். எல்லாத் தேவர்களும் தினந்தோறும் அந்தத் தீர்த்தத்திற்கு வந்து நீராடுகின்றனர். கார்த்திகை மாதத்திய ஞாயிற்றுக் கிழமைகளில் அப்பொய்கையில் நீராடுபவன் உயர்கதி பெறுவான்.

 

 

  
 
 

 

Copyrights © 2009 - 2010 Arulmigu Venkatachalapathiswami Temple Oppiliappan Koil All Rights Reserved
Site design and Maintained by Anna Silicon