தலவரலாறு

திருவிண்ணகரத் தல மான்மியம்
(ப்ரஹ்மாண்ட புராணத்திலுள்ளது)

பிரம்மதேவர் அருளியது

1.எம்பெருமானிடம் திருத்துழாயின்(துளசி) வேண்டுகோள்:

திருத்துழாய்த்தேவி ஒருகால் எம்பெருமானை அடைந்து வணங்கி நின்று, " நாதனே நீங்கள் இலக்குமியை மார்பில் வீற்றிருக்கச்செய்தீர்கள். அதனால் அவள் தனிச்சிறப்புற்று நிற்கின்றாள். என்னையும் அங்ஙனமே திருமார்பில் தரிக்க வேண்டும்" என்று வேண்டினாள்.

2.திருத்துழாய் தேவி(துளசி) வரம் பெறுதல்:

இதைக்கேட்ட எம்பெருமானும் திருத்துழாய் தேவியை நோக்கிப் பின்வருமாறு கூறித் தேற்றினான். "தேவியே இலக்குமி முன்பு கடுந்தவம்புரிந்து என் மார்பை இடமாகக்கொண்டாள். அவள் பூமிதேவியின் வடிவங் கொண்டு மண்ணுலகில் கங்கையிலும் சிறந்த காவிரியாற்றின் தென்புறத்தில் மார்க்கண்டேய முனிவருக்குப் புதல்வியாகப் பிறக்கப் போகின்றாள். அதற்கு முன்பே நீ அம்முனிவரின் தவ வனத்திற்கு சென்று சென்று செடியுருவில் சிறிதுகாலம் இப்பாயாகில், சில நாள் கழித்து யான் அந்த இடத்திற்கு வந்து அத்தேவியை மணம் புரிந்து மார்கண்டேயருடைய வேண்டுகோளுக்கிணங்கி பூமி தேவியுடன் அங்கு நீடுழி காலம் வசிப்பேன், உனக்கு அப்பொழுது பல பெருமைகள் ஏற்படும்.

  
 
 

 

Copyrights © 2009 - 2010 Arulmigu Venkatachalapathiswami Temple Oppiliappan Koil All Rights Reserved
Site design and Maintained by Anna Silicon