17. வழிபாட்டு முறை

ஸ்ரீ வைகாநஸ ஆகமமுறைப்படி இவ்வாலயத்தில் பூஜைகளும் விசேஷ உத்ஸவங்களும் நடத்தப் பெறுகின்றன. தினந்தோறும் ஆறு காலம் பூஜை நடக்கின்றது. காலையில் முதலில் விசுவரூப ஸேவை நடக்கும். இத்தலத்து எம்பெருமானுக்கென்றே அமைந்துள்ள ஸுப்ரபாதம் - ப்ரபத்தி - மங்களம் இவை விசுவரூப ஸேவை மையத்தில் எல்லோரும் கேட்டு இன்புறுமாறு ஒலிபெருக்கியின் வாயிலாக ஓதப்படும். பின்பு திருப்பாவை - வேதம் சாத்துமுறை, பின் பெரிய ஆராதனம் நடக்கும். அப்பொழுது மற்ற எல்லா ஸந்நிதிகளுக்கும் நிவேதனம் நடைபெறும். அதன்பின் நண்பகலில் கடைசிக்காலப்பூஜை " உச்சிக்காலம் " நடைபெறும். மாலையில் முதற்காலப் பூஜை நடக்கும். அப்பொழுது நித்யாநுயஸந்தாநமும் வேத பாராயணமும் சாத்துமுறையும் நடக்கும். அதன்பின் இரண்டாவது கால பூஜை விசேஷமாய் நடக்கும்.

அப்பொழுது மற்ற ஸந்நிதிகளுக்கும் நிவேதனம் உண்டு. பிறகு இரவின் கடைசிக்கால பூஜை " அர்த்தஜாமம்" நடைபெறும். இவ்வாறு ஆறு கால பூஜைகள் வழுவின்றி நடைபெறுகின்றன.


 

18. பிரார்த்தனை உத்ஸவங்கள்

இத்திருக்கோயிலுக்கு வரும் எண்ணற்ற பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்காகப் பிரார்த்தனை உத்ஸவங்கள் தினமும் நடைபெறுகின்றன. பிரார்த்தனை திருக்கல்யாண உத்ஸவம், கருட சேவை, தங்கரதம், ப்ரஹ்மோதஸவம், ஊஞ்சல் சேவை, பள்ளியறை சேவை, நிதிய ஆராதனம் செய்யப்படுகின்றன. மூலவர் திருமஞ்சனம் உத்ஸவர் திருமஞ்சனம் முதலியவையும் செய்யப்படுகின்றன.

 
 
 
 

 

Copyrights © 2009 - 2010 Arulmigu Venkatachalapathiswami Temple Oppiliappan Koil All Rights Reserved
Site design and Maintained by Anna Silicon