15.மற்ற சன்னிதிகள்

ஸ்ரீ தேசிகன் ஸந்நிதி ஆலயத்திற்குள் கர்ப்பக்ருஹத்திற்கு வெளியே மிக அருகில் அமைந்துள்ளது. உள்ப்ராகாரத்தில் வலம் வரும் போது வெளிமண்டபத்தில் தென்புறத்தில் ஹநுமான் ஸந்நிதியும், வடபுறத்தில் ஆழ்வார்கள் ஸந்நிதியும், அதற்குக் கிழக்கே ஸ்ரீ ராமன் ஸந்நிதியும் உள்ளன. அதற்குத் தென்புறத்தில் ஸ்ரீ பாஷ்யாகாரர் ஸந்நிதி உள்ளது. ஆலயத்தின் உட்கட்டிடத்துக்கு வெளியே வடபுறத்தில் புஷ்கரிணிக்கு எதிரே தனியாக என்னப்பன் ஸந்நிதியும், தென்புறத்தில் மணியப்பன் ஸந்நிதியும் விளங்குகிறன. என்னப்பன் ஸந்நிதிக்கு முன்பு, புஷ்கரிணியின் மேற்கில், பூமிநாச்சியார் அவதார ஸ்தலம் உள்ளது. உள்கட்டிடத்திற்கு வெளியே மூலஸ்தாநத்தை நோக்கிய கருடன் ஸந்நியும், வீதியிலிருந்து ஆலயத்துள் புகும்போது முதலடியிலேயே அனைவரும் வழிபடுவதற்குப் பாங்காகத் தென்புற மாடத்தில் ஒரு சிறிய கண்ணன் ஸந்நிதியும் உள்ளன.


16. சம்ப்ரதாயம்

இந்த ஸந்நிதி வடகலை ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தை சேர்ந்தது. இதில் ஸ்ரீ தேசிகனுக்கு மிக முக்கியத்துவம் உண்டு. பெருமாள் - பிராட்டி கண்டருளும் பற்பல உத்ஸவங்களில் பெருபாலும் ஸ்ரீ தேசீகனும் உடன் எழுந்தருள்வது நெடுநாளைய வழக்கம்.

 


 
 
 

 

Copyrights © 2009 - 2010 Arulmigu Venkatachalapathiswami Temple Oppiliappan Koil All Rights Reserved
Site design and Maintained by Anna Silicon